top of page

YANTRA

                                                                                      மந்திரம்
 

மந்திரங்கள் என்பது ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் உருவேற்றி அதற்கு சக்தி கொடுத்து சித்தர்களாலும் ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது.
 

மனனம் செய்பவனைக் காப்பது மந்திரம்.                                                                                       

                                                                                         மந்திரம்

மந்திரம் என்பது ஒலி சக்தியாகும். இது நமது காதால் கேட்டுணரக் கூடிய அதிர்வெண்களைக் கொண்ட, ஒலி அலைக்கூட்டமாகும்.
 

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தில் ஒலி, ஒளி, கதிர் அலைகளைக் கொண்டு நோய் நீக்கப்படுகின்றது. எந்த ஆயுதத்தாலும் சுலபமாக பகுக்க, அறுக்க முடியாத உலோகங்களை, தாதுக்களை பகுக்க முடிகின்றது. இரசாயன சோப்புகளால் நீக்க முடியாத அழுக்குகளை ஒலி அலைகளால் முற்றிலும் நீக்கி வெண்மையாக்கும் சாதனங்களெல்லாம் வந்து விட்டன.
 

இப்படி மாயம் செய்து உதவும் ஒலி அலைகள் (H.F.) மந்திரங்களாக ஏன் நம் மனதின் மாசினை நீக்க முடியாது. ஏன் நோயை நீக்க முடியாது, ஏன் வினையை அறுத்து நல்லன பெற முடியாது. சிந்தித்துப் பாருங்கள்.
 

நாம் காதினால் கேட்க முடியாத மிகத் தாழ்ந்த (low frequency) ஒலி அலையை எலிகள், மூஞ்சூறு கேட்கின்றன. (மூலாதாரக் கடவுளுக்கு மூஞ்சூறு வாகனம்) நம் காதினால் கேட்டுணர முடியாத உயர் ஒலி அலைகளை நாய்கள் கேட்டு உணர்கின்றன. (சகஸ்ரஹார சக்தியில் குடிகொண்டு எமனை அணுக விடாது காக்கின்ற கடவுளாம் பைரவருக்கு நாய் வாகனம்).
                                                                   

                                                                   மந்திரங்கள் தோன்றிய விதம்
 

ஆண்டவனின் மெய்யுருவம் அருட்பெருஞ்ஜோதியானது. மானிடர் பொருட்டு இறங்கி ஒவ்வொரு இறைவனாக முடிவெடுத்தது. நிறைமொழி மாந்தர் எனப்படுகின்ற சித்தர்கள் இவற்றை உணர்ந்து கடவுளின் மூல மந்திரங்களையும் மற்ற மந்திரங்களையும் உலகம் உய்வதற்கு வழங்கியருளினார்கள். எப்படி?
 

எந்த பொருளும் அசையும் போது ஒலியுண்டாகும். உதாரணமாக அருட்பெருஞ்ஜோதியிலிருந்து ஸ்ரீசரஸ்வதியாக, கல்வி சக்தியாக உருமாறும்போது ஏற்பட்ட அசைவின் ஒலி 'ஐம்' என்றானது.

 

ஸ்ரீமஹா லட்சுமியாக மாறும்போது 'ஸ்ரீம்' என்றானது.
 

மஹாகாளியாக, மனோன்மணியாக மாறும் போது 'ஹ்ரீம்' என்றானது.
 

இப்படியே மந்திரங்கள் உணரப்பட்டு உணரப்பட்ட மந்திரங்கள், தேவைக்கேற்ப கோர்வையாக்கப்பட்டு, அந்தந்த சித்தர்கள், ரிஷிகள் அனுஷ்டித்த மந்திரங்கள் என்றும் சித்தி செய்து வழங்கப்பட்டது.
 

எவ்வாறு ஒலி அலையின் சப்தத்தை கண்டு பிடித்தார்கள்.
 

சுத்த தேகம் பெற்று அதன் மேல் உயர்நிலை உடம்புகளாகிய ப்ரணவதேகம் (ஒலி உடம்பு) ஞானதேகம் (ஒளி உடம்பு) நிலை பெற்ற சித்தர்களும், ரிஷிகளும், அருட்பெருஞ்ஜோதியிலிருந்து அவ்வுருவ தேகங்களை மனதால் எடுத்து, அகத்தில் இந்த பிண்டத்துள் கண்டு உணர்ந்தார்கள். இதுவே 'அண்டத்துள் உள்ளது பிண்டம். பிண்டத்துள் உள்ளது அண்டம்' என்ற பழமொழியும் உண்டாயிற்று.
 

மந்திரங்களுள் ஹ்ரீம் என்பது மனம் ஒடுங்கி, உயர் இன்ப நிலையில் தன்னை உணருகின்ற போது எழுகின்ற ஒலி அலையே ஹ்ரீம் என்பதாகும். இதுவே மிக உயர்ந்த மனோன்மணி பீஜம்.
 

அது போல் பஞ்ச பூத சக்தி ஒலியை தன்னுள் கொண்டது 'நமசிவாய' மந்திரமாகும்.
 

இவ்வுலகமும், இவ்வுலக சக்தியும் பஞ்ச பூதத்தாலேயே ஆனது. ஆகையால் 'நமசிவாய' மந்திரம் எல்லா மந்திரங்களுக்கும் தாயாகும்.
 

                                                                            மந்திரங்களின் வகை
 

மந்திரங்களில் பல வகை இருந்தாலும் அவற்றில் 1. காயத்ரி மந்திரம், பீஜாட்ஷரம் என்ற வித்து மந்திரம் 3. மூல மந்திரம் 4. மாயா மந்திரம் 5. பிராணப் பிரதிஷ்டை மந்திரம் 6. பிரயோக மந்திரம் (அஷ்ட கர்ம மந்திரங்கள்) ஆகியவை முக்கியமானவை.
 

                                                                                     யந்திரம்
 

சக்கரம் என்பதையே யந்திரம் என்கின்றோம். மந்திரத்தை நிலை நிறுத்தும் பீடமே யந்திரம். சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து ஒரு இடத்தில் அல்லது வங்கியில் வைப்போம் அல்லவா, அது போல.

 

யந்திரங்களில் பல வகை அமைப்புகள் இருந்தாலும் யந்திரம் 1. மூல யந்திரம் 2. பூஜை யந்திரம், 3. பிரயோக எந்திரம் 4. தாபன எந்திரம் 5. ரட்சிக்கும் எந்திரம் 6. தாரணயந்திரம் ஆகியவை முக்கியமானவை.

bottom of page